Monday, November 2, 2009

பண்டிகை


பொதுவாக நமது நாட்டில் பண்டிகை நாட்களில், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவிப்பதும், தங்கள் வீடுகளில் செய்த இனிப்புகளை அண்டை வீட்டாற்க்கும் நண்பற்களுக்கும் கொடுப்பதும் நமது வழக்கம். சிறு வயதில் அப்படி பலகாரங்களை எடுத்துக்கொண்டு பக்கத்து வீட்டிற்க்கு செல்வது மிகவும்
பிடித்தமான ஒரு செயல். அப்படி செல்லும் பொழுது அவர்கள், என்ன படிக்கிறாய், எங்கே படிக்கிறாய் என்று கேட்பது வாடிக்கை. நான் படித்த ஆரம்பப்பள்ளின் பெயரை கூறி மிகவும் பெருமை கொள்வதுண்டு. ஒரு வருடத்தில் பலமுறை சந்தித்தாலும், அவர்கள் அதிகபட்சமாக விசாரிப்பது என்னவோ அவ்வளவேதான் என்பதை புரிந்து கொள்ள பல வருடங்கள் பிடித்தது, இருந்தும் ஒரு பொழுதேனும் பதில் சொல்வதை தவிர்த்ததில்லை. நான் வீட்டில் கடைசி பையன் என்பதால், கல்லூரி நாட்கள் முடிந்தும், இதே பழக்கத்தை கடை பிடிக்க வேண்டிய கட்டாயம்.

இப்படி ஒரு நாள் விடுமுறையில் தீபாவளிக்காக ஊர் திரும்பியிருந்தேன். எத்தனை நேரம்தான் சிறப்பு நிகழ்ச்சிகளை தொலை காட்சியில் பார்த்துக்
கொண்டிருப்பது. நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் மாலை தேனீருக்காக அவருடைய வீட்டிற்க்கு சென்றிருந்தேன். நான் கவனித்த வரை, அவர்கள் தீபாவளிக்காக எந்த முயற்ச்சியும் எடுத்துகொண்ட மாதிரி தென்படவில்லை. நாகரிகம் கருதி அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் களித்து நண்பரே மிகவும் பெருமையாக நகைத்தபடி நாங்கள் எல்லாம் தீபாவளி பொங்கல் கொண்டாடுவதை தவிர்த்து பல காலாமாகி விட்டது என்றார். நண்பர் மிகவும் நல்லவர். அதில் எள்ளலவு கூட குறை கூற முடியாது, நண்பருக்கு வாழ்க்கை வியாபாரம், வியாபாரமே வாழ்க்கையாகிப்போன எந்திரக்கதிக்கு உள்ளாகியதால், பண்டிகையின் ஆரம்ப நோக்கத்தையும், காரணத்தையும் புரிந்து கொள்ள வைப்பத்து சற்று கடினமாகிப் போனது. ஆனால் இறுதியில் உணர்ந்தார் என்பதும், அடுத்த பண்டிகையை கொண்டாடினார் என்பதுதான் உண்மை, அதான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேனே மிகவும் நல்லவர் என்று! கத்தியின்றி பேசியே நான் ஏற்படுத்தும் ரணத்தால் கூட, பண்டிகைகளை கொண்டாடுவதே மேல் என்று கூட மனம் மாறி இருக்கலாம்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு சமுதாயத்தில் ஒரு தவிர்க்கமுடியாத அங்கம். ஆதலால் பொருளாதார சம சீர் நிலை பெறுவதற்க்காக எற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிதான், பண்டிகை. தீபாவளி அன்று ஒருவர் துணி எடுப்பதால் ஒரு நெசவாளியும், தையல்காரரும், பட்டாசு வாங்குவதால் ஒரு கடை நிலை
மத்தாப்பு சுற்றும் தொழிலாளியும் பயன் பெறுவார். பொங்கல் அன்று பானையும், கரும்பும், மஞ்சளும் வாங்குவதால் கண்டிப்பாக ஒரு குயவரும், விவசாயியும் பயன் பெறுவார். ஒவ்வொருவருக்கும் அடிப்படை காரணத்தை கொண்டு செல்வது கடினம் என்பதால், கடவுளின் பெயரில், தீபாவளி அன்று வீட்டிற்க்கு முன் மத்தாப்பு வெடித்த குப்பை சேர்வதும், பொங்கலன்று கரும்பு தின்பதும் ஒரு ஐதீகமாக கொண்டு வரப்பட்டது. கடவுளின் பெயரைச் சொன்னதும் தவறாமல், ஒரு சரியான செயலை எதற்கு என்று தெரியாமலே செய்தோம். ஆனால் நாம் இதை சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பதே நாம் அறிய வேண்டிய கூற்று.

மேலை நாட்டு மோகத்தில் அம்மா தினம், அப்பா தினம், காதலர் தினம் என்று பூச்செண்டிற்க்கும், மது பான வகைகளை அருந்துவதற்க்கு செலவளிக்கும் நாம், பாரம்பரியம் மிக்க நமது நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பண்டிகைகளை கொண்டாடுவதில் ஏன் சுனக்கம் காட்ட வேண்டும். மேலை நாடுகளில், பதினெட்டு வயதான பின், பெற்றோர்களை விட்டு தனியாக வசிப்பது அவர்களுடைய வழக்கம், ஆகையால் பல தினங்களை கொண்டாட வேண்டிய கட்டாயம். பூலோக ரீதியாக அங்கு விளையும் பயிர் வகைகள் வேறு, தட்ப வெப்பநிலை வேறு, உணவு வகைகள், வாழ்க்கை முறையே வேறு. நமது ஊர்களில், எந்த தேவையும் இல்லாமல் இப்படி செயற்கையாக பல தினங்களை புகுத்தி, பலனடைவது என்னவோ ஒரு சில பண முதலைகள் தான். காதலர்களும் சரி, நண்பர்களும் சரி, தினமும் ஒர்வருக்கொருவர் பார்த்து கொள்வது வாடிக்கை, பிறகு எதற்கு தனி தினம் வேறு. "இன்று என்ன, பச்சை சட்டை? காதலர் தின சிறப்பா? நண்பர்கள் தினத்திற்கு என்ன திட்டம்?" வெட்கக்கேடு, இப்படி கேட்பவர்களை முதலில் கல்லை விட்டு அடிக்க வேண்டும். அலை பேசியுலும், மின்னஞ்சலிலும் குறுஞ்செய்திகள் அன்னுப்பியே, மனதும் குறுகிப் போய்விட்டது போலும்.

கடவுள் மறுப்பாளர்கள் சிலர், எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆகையால் கொண்டாடமாட்டேன் என்று ஒரு பக்கம். இவர்கள் எதையோ நிருப்பிப்பதற்க்கு, தன்னையும் வருத்திக்கொண்டு, சுற்றி இருப்பவனையும் வருத்துபவதே இவர்களுக்கு வாடிக்கையாக போய் விட்டது. ஒருவற்க்கு பணம் இல்லை என்று பொருளதார ரீதியாக செய்யும் உதவிற்க்கு முடிவில்லை, ஆனால் மாறாக கடினமாக உழைப்பதற்க்கு வாய்ப்பளிக்களாம். இப்படி முன்னோர்களால் எற்ப்படுத்தப்பட்ட மரபுகளை சரிவர செய்து வந்தாலே, உங்களால் ஒரு கடின உழைப்பாளின் வீட்டில் அடுப்பெரியும், இது கோவிலுக்குச் சென்று புண்ணியம் தேடுவதை விட பன்மடங்கு சிறந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு, சென்னை பெண்கள் கல்லூரி ஒன்றில், தீபாவளிக்காக கைத்தறி நெசவு சேலைகளை வாங்கினார்கள் என்பது ஒரு குறிப்பிட்டத்தக்க மாற்றம். சமுதாயத்தில் அனைவர்க்கும் அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தியாகும் பொழுது, குற்றங்கள் கண்டிப்பாக குறையும், ஆகையால் பண்டிகைகளை மரபு தவறாமல் கொண்டாடுவோம் என்பதில் உறுதியாக இருப்போம்.

No comments:

Post a Comment

Facebook