சமீபத்தில் அம்பாசமுத்திரம் அருகே ஒரு காவலர் பரிதாபமாக குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார். சுகாதரத்துறை அமைச்சரும், மற்றுமொரு அமைச்சரும் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். அமைச்சர் வாகனத்துடன், சம்பவத்தை அறிந்தவுடன், அணைத்து வாகனங்களும் நின்றன. முதலுதவி வாகனம் வரத் தாமதமானதால், அங்கிருந்த காவல் துறை வாகனத்திலே அவர் கொண்டு செல்லப்பட்டார், இருந்தும் அவர் பிழைக்கவில்லை என்பது ஒரு வருந்தத்தக்க செய்தி. இந்த சம்பவத்தை குறித்து அமைச்சரையும், சுற்றி இருப்பவர்களையும் குறை கூறுவது முற்றிலும் தவறு, ஏனெனில், சம்பவ இடத்தை கடந்து அமைச்சர் செல்லவில்லை, மேலும் அமைச்சர் நேரடியாக சென்று முதலுதவியும் செல்ல இயலாது. உடனடி நிவாரணத் தொகையாக, லத்திகாசரன் அவர் குடும்பத்துக்கு சேர வேண்டிய தொகையை குடுத்து உதவி செய்திருக்கிறார். எந்த ஒரு தொகையும் ஒரு உயிருக்கு சமமாகாது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு, இந்த தொகை இழந்த குடும்ப உறுப்பினற்க்கு மாற்றும் ஆகாது.
இந்த செய்தியின் தாக்கம் சிறிது காலத்திற்க்கு பிறகு ஒரு கறை வேட்டியின் தலையீட்டால் காற்றுடன் கரைந்தும் போகும். ஆனால் திருத்த வேண்டியது என்னவோ குண்டரும்,குண்டரை இயக்குபவரும்தான். திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, என்பது திருடனுக்கு பொறுந்தும், ஆனால், இது ஒரு கொலைகாரனுக்கும், லஞ்சம் வாங்கும் அரசாங்க ஊழியனுக்கும் பொருந்துமா?
லஞ்சம் என்பது சட்டத்திற்க்கு உட்படாத நடைமுறை கேடாகிவிட்ட ஒன்று. இது உலகம் முலுவதும் பல உருவங்களில் செயல் பட்டு வரும் ஒவ்வாமை. இது நமது நாட்டில் பணம் எனும் ரூபத்தில் அசுர வளர்ச்சி கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் வெளி நாட்டில் சம்பாதித்து, உள் நாட்டில் முதலீடு செய்வது நடைமுறை, ஆனால் இன்று உள் நாட்டில் கையூட்டு பெற்று, அயல் நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் பதுக்கி வைக்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசியலும், காவல் துறையும் தன்னை முதலிடத்தில் தக்க வைத்து கொள்வதற்க்கு, இரவு பகல் பாராது இடை விடாத போட்டி. இவர்கள் உதவி இன்றி, யாரவது ஒருவன் ரவுடியாக தலையடுக்க முடியமா என்றால், கண்டிப்பாக இல்லை. ஒரு முறை தவறு செய்து காவல் துறையிடம் சிக்கிக்கொண்டால், பிறகென்ன? புலி வாலை பிடித்த கதைதான். இறுதி வரை ரவுடி எனும் அரிதாரத்துடனே சாக வேண்டும், இல்லை உயிரை காப்பற்றிக்கொள்ள அரசியலில் புகுந்து மக்களின் உயிரை எடுக்க வேண்டும். அம்பாசமுத்திரத்தில் நிகழ்ந்தது ஒர் உதாரணம். எந்த ஒரு காரணமும் இன்றி, பத்திரிக்கைகளும், தொலைக்காட்ச்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு அமைச்சரை கூற்றம் சாட்டின. பாதிக்கப்பட்டது போலிஸ் என்பதால் இவ்வளவு அமர்க்களம். காவல் துறைக்கே இந்த கதி, சாமன்யனின் கதி அதோ கதிதான்.
முதல் முறை தவறு செய்தவனை மன்னித்து திருத்துவதற்க்கு ஒரு சட்டம் அமைய வேண்டும், கண்டிப்பாக சிறைக்கு அனுப்பக்கூடாது, சிறைக்கு அனுப்பி அவனை நிரந்தர திருடனாக மாற்றக்கூடாது. சட்டம் ஒரு புறம் இருக்கட்டும், அன்றாட வாழ்வில் நாமும் கடைபிடிக்க வேண்டியது அத்தியாவசியம். உதாரணமாக, நமது வீடுகளில் வேலையாட்கள் ஒரு முறை திருட்டில் ஈடு பட்டால் நாம் அவர்களை நிரந்தரமாக அடித்து விரட்டி விடுவோம், என்றாவது நாம் அவர்களை மன்னித்து, குறிப்பாக அடிக்காமல் மீண்டும் வேலை செய்ய அனுமதித்துள்ளோமா? நான் ஒரு முறை மன்னித்து உள்ளேன், எனக்கும் வெளியே சென்ற பொருள் மீண்டும் கிடைத்தது, அவர்களுக்கும் உணர்வுப்பூர்வமாக திருந்துவதற்க்கு வாய்ப்பாகவும் அமைந்தது.
போலிசின் அனுகுமுறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியது அவசியம். புலியின் தாக்குதல் வீரமல்ல,அதனுடைய பயத்தின் வெளிப்பாடு, ரவுடியும் அதுபோலத்தான். அப்படி ஒரு வித பயத்தில் இருப்பவனை பிடித்து கட்டி வைத்து அடித்து துன்புறுத்தி, அவன் வெளியே வரும் போது, சமுதாயத்தின் மீதும், குறிப்பாக காவல் துறையின் மீதும் ஒரு வன்மம் கொள்ளச்செய்து விடுகிறது. மாறாக, பொது பணித்துறையில் அவர்களை ஈடு படுத்தி, மரியாதை எனும் அஸ்த்திரத்தால் வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்கலாம். ஒவ்வொருவரும் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை, கடைசில் சாப்பிடப்போவதோ வயிறு முட்டும் வரைதான், படுக்கப்போவதோ ஒரு அரையில்தான். நான்கு அறை இருப்பதற்க்காக, நான்கு அறையிலும் உருண்டு புரண்டு படுக்கப்போவதில்லை. ஆகையால் அடுத்த தலைமுறைக்கு எந்த மாதிரி குணாதிசியங்களை நாம் முன் உதாரணமாக விட்டுச்சென்றோம் என்பதும், எந்த மாதிரி ஒரு தரமான சுற்றுப்புறத்தை விட்டுச்செல்கிறோம் என்பதே முக்கியம்.
No comments:
Post a Comment