Saturday, November 27, 2010

அயல் நாட்டு அவதி

ஏதோ படிச்சோம் ஏதோ தட்டு தடுமாறி பாஸ் பண்ணோனு இருந்தா ரொம்ப கஷ்டம். நல்லா படிக்கனும் அப்பத்தான் மச்சான் மாதிரி நீயும் அமெரிக்காவோ, எதுத்த வீட்டு தம்பி மாதிரி ஆஸ்திரேலியாவோ போக முடியும். நம்ம ஒன்னு விட்ட சகல சிங்கப்பூர்ல இருக்காரு, நல்லா படிச்சா வேலைக்கு உதவி பண்ணுறேன்னு சொல்லி இருக்காரு. சகல ஏதோ சிங்கப்பூருக்கே கவர்னர் மாதிரி. படிக்கிற காலத்துல காதுல கேட்டு கேட்டு சலிச்சு போனதுதான் மிச்சம். கடைசில உண்மை என்ன? படிக்கிறதுக்கும், அயல் நாடு போறதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்.

இங்க வந்துதான் ஆஹா ஓஹோன்னு இருக்கான்னு பாத்தா அதுவு இல்ல.அந்த கண்றாவி இங்க வந்த பிறகுதான் தெரியுது. ஊருல அம்மா அப்பாக்கு பணம் அனுப்ப வக்கு இருக்கோ இல்லையோ, வக்கனையா இங்க வீடு வாங்கிட்டு, பாக்கிறவன்கிட்ட பாக்காதவன்கிட்டலாம் கை கடிக்குது கால் கடுக்குதுன்னு வாய்  விட்டு புலம்பறது. இன்னோரு கோஷ்டி, தன் கிட்ட யாராவது எதையாவது கேட்க போகிறார்களோ என்று முன் கூட்டியே புலம்ப ஆரம்பித்து விடுவது. மொத்தத்தில் இயல்பாகப்பேசி ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்த காலம் மலையேரி போச்சுது, அதுதான் கசப்பான உண்மை. அயல் நாடோ, உள் நாடோ, நிலைமை முன்னைப்போல் இல்லை.

வெளி நாட்டு நண்பர் ஒருத்தரு சமீபத்துல ஜவுளி கடைக்கு போய் இருக்காரு. அவர் சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது 5000 ருபாய்க்கு மனைவிக்கு பட்டு சேலை எடுத்துக்கொடுத்தா, அது ரொம்ப பெரிய விஷயம். 5 வருஷம் கழித்து  க்ரீன் கார்டு வாங்குன பெருமையுடன் ஊருக்கு போயி, ஜவுளிக்கடைல ஒரு 15000 ருபாய்க்கு சேலை எடுத்து போடுங்கன்னு சொன்னா, வெளிப்படையா ஜவுளிக்கடைக்காரரு அவருக்கிட்ட " நீங்க அமெரிக்கால்ல இருந்து வந்திருக்கீங்கலா?"  னு கேக்குறாரு. அடுத்த அதிர்ச்சி என்னான்ன?  நீங்க எதுத்த கடைக்கு போனா, அங்க கொஞ்சம் விலை கட்டுப்படியாகுற மாதிரி கிடைக்கலாம்னு சொல்லியிருக்காரு. இது ஒரு அப்பட்டமான உண்மை.

இந்திய நண்பர்கள் அனைவரிடத்தும் ஒரு பொதுவான நல்ல வழக்கம். எங்கேயாவது முதலீடு செய்து கொண்டேயிருப்பது. ஒரு பிரிவினர், அயல் நாட்டில் வீடு வாங்கி விட்டு, இந்த மாதம் பட்ஜெட் கொஞ்சம் இருக்கம் என்று விழி பிதுங்கி நிற்பது, மற்றொரு பிரிவினர் இனி மேல் எங்கு இருக்கப்போகிறோம் என்பதே தெரியாமல் அயல் நாட்டில் சம்பாதித்து உள் நாட்டில் வீடு வாங்கி, வெளியிலும் சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம அவதிப்படுவது, ஒரு தனி ரகம். வெளி நாட்டிலிருந்து ஒருவர் உள்ளூருக்கு எதாவது முதலீடு செய்யாலாம் என்று வந்தால், அவர்கள் படும் கஷ்டம் சொல்லி மாலாது. கை வண்டி இலுப்பவரிலிருந்து, ரியல் எஸ்டேட் செய்பவர் வரை, அயல் நாட்டு அன்பரிடம் வசூலிக்கும் தொகை சற்று மிகுதியாகவே இருக்கும்.

வெள்ளைக்காரனக்கு ஒரு விஷயம் மிகவும் நன்றாக தெரியும். ஒரு இந்தியனிடத்தில் எப்படி வேலை வாங்குவது அல்லது இந்தியனை வைத்தே மற்ற இந்தியர்களிடம் எப்படி வேலை வாங்குவது, இந்தியனை வைத்தே மற்ற இந்தியர்களின் கண்ணை எப்படி குத்துவது, என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. கடையிசியாக ஒரு இந்தியனுக்கு கேடு விளைவிப்பது என்னாவோ, பெரும்பாலும் சக இந்திய குடி மகனே. என்ன பன்ன? அவனுக்கு நம்மள ஆண்டு பழக்கம், நமக்கு எவனையாவது ஆளவிட்டே பழக்கம். நாம் தேர்ந்தெடுக்கும் நபர் அதற்க்கு மேல் யாராவது பார்ப்பதற்க்கு அழகாயிருந்தாலும் ஓட்டு, அழகாய் தமிழ் பேசினாலும் ஓட்டு, காசு கொடுத்தாலும் ஓட்டு.  ஒவ்வொரு இந்திய குடிமகனும், ஒரு அன்னப்பறவையயை போல், அது எப்படி பாலையும், நீரையும் பிரித்தெடுக்குமோ, அது போல் நாமும், சரியான நபரை தனியாக பிரித்து, அவருக்கு டெபாசிட் கூட கிடைக்கமுடியாத படி செய்துவிடுவோம். எங்கேயோ படித்த ஒரு ஹைகூ கவிதை  "இந்தியாவுல சுதந்திரம் கிடைத்த பிறகு, எல்லோருக்கும் பட்டாடை உடுத்தாலாம் என்று ஆசை, கிடைத்தபிறகுதான் தெரிந்தது, ஏற்கனவே கட்டியிருந்த கோவணமும் உருவப்பட்டது என்று".

ஏன் இந்த அவதி. அயல் நாட்டில் சம்பாத்திது உள்ளூரில் முதலீடு செய்பவன் கெட்டிக்காரனா? இல்லை உள்ளூரில் சம்பாதித்து அயல் நாட்டில் முதலீடு செய்பவன் கெட்டிக்காரனா? அது எப்படி சாத்தியம்? இது என்னவோய் அசட்டு தனாமான கேள்வி? சத்தியமாக சாத்தியமே. உள்ளூர் அரசியவாதியிடம் கேட்டு பாருங்கள். ஊருக்கு ஒரு வீடு வைத்து இருப்பார், ஐயா நான் சொல்வது செங்கலும் சிமெண்டும் சேர்த்து கட்டிய வீடு, நாட்டுக்கு ஒரு வங்கி கணக்கு வைத்து இருப்பார். அனைத்து துறைகளிலும் தனது குடும்ப பிரதி நிதிகளை வைத்து இரவு பகல் பாராது சம்பாதித்து கொண்டேயிருப்பார், மன்னிக்கவும், தொண்டாற்றிக்கொண்டேயிருப்பார். ராஜாவோ மந்திரியோ, ராஜா மாதிரி மந்திரியோ, இப்படி பொருள் ஈட்டுவதுதான் புத்திசாலித்தனம். கனிப்பொறியில் உட்கார்ந்து கண்ணை கசக்கி, மூளையைய் கசக்கி, உடலை வருத்தி  வெள்ளைக்காரன் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிப்பவனை என்னவென்று சொல்வது.

1 comment:

Facebook