Sunday, December 20, 2009

சினிமாவுக்கு ஒரு கதை வடிவம்


படித்த பின், முதல் வேலை என்பது ஒரு சுகமான அனுபவம். வேலையில் சேரும் கட்டளை வந்ததும் இந்த சந்தோஷம் அரை நாள் கூட நீடிப்பதில்லை. கி.பி. 2000த்துக்கு முன்பு, தொழில் நுட்பம் படித்தவனுக்கு வேலை மதுரையுலும், திரு நெல்வேலியுலுமா கிடைக்கும்? கெட்டும் பட்டணம் போ என்பது போல் சென்னைக்குத்தான் செல்ல வேண்டும். பிறகுதான் உடன் படித்த நண்பர்கள் நினைவிற்கு வருவார்கள். அவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடி, தங்குவதற்க்கு விண்ணப்பம் தெரிவித்து, அவர் ஒப்புதல் அளித்து, அப்பாடா தங்குவதற்க்கு ஒரு அறை கிடைத்தாகிவிட்டது என்று ஒரு பெரும் மூச்சு விடும் பொழுது வேலை கிடைத்த சந்தோஷ்ம் எங்கோ பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கும்.

திரைப்படத்தில்தான், விஜய் மற்றும் கமலஹாசன் கிராமத்தில் இருந்து வந்ததும் அவருடைய நண்பர் மிகப் பெரிய வீட்டில் அவருக்கு என்று ஒரு அனைத்து வசதிகளுடன் கூடிய அறையைய் கொடுப்பார், ஆனால் எனது நண்பரோ, அறைக்கு சென்ற பின், என் உடைமைகளை வைப்பதற்க்கும், நான் படுப்பதற்க்கும் அறையின் ஒரு பகுதியைய் எனக்கு பிரித்து தருவார். இரண்டு அறை உள்ள வீட்டில் ஆறு பேர் தங்கி இருப்போம். முதல் இரண்டு தினங்கள்தான் சற்று கடினமாக இருக்கும், பின்பு ஒவ்வொரு நண்பருடனும் பழகிய பிறகு, அறை நண்பற்களுடன் நாமும் ஒருவராகி விடுவோம். ஒரு நண்பர் இயந்திரவியலிலும், ஒரு நண்பர் புள்ளியலிலும், மற்றும் பல துறைகளிலும் வேலை பார்ப்பார். வெள்ளி மற்றும் சனிக்கிளைமைகளில் நண்பர்களுக்கு நண்பர்களும் எங்கள் அறைகளில் பொழுதைக்களிப்பது வாடிக்கை. இதில் சினிமாத்துறையைய் சேர்ந்த நண்பர் ஒருவரும் அடக்கம். மிகவும் அழகான கதைகளை தன்னுள் வைத்திருந்தார், ஆனால் கடைசி வரை அவரால் அதில் இருந்து மீள முடியவும் இல்லை, தனது திறமைக்கு தக்க வெற்றியும் பெற இயலவில்லை, என்பது என்னுடை தீராத ஆதங்கம், ஒரு ஒப்பிலா படிப்பினையும் கூட.

இன்றைய தினங்களில் வரும் திரைப்படங்களை காணும் பொழுது எதற்காக இப்படி பணத்தை செலவழிக்கிறார்கள் என்ற வினா எனக்குள் எழுகின்றது. திரைப்படத்துறையைய் சார்ந்த நண்பர் எனது அறைக்கு வந்த பொழுது, அவரிடம் உள்ள ஒரு நாற்பது பக்கமேயுள்ள ஒரு சிறிய உரையைய் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்து. 1950க்கு முன்பு வந்த அச்சீடு, மிகவும் நைந்து போயிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த சில விவரங்கள் மிகவும் பிரமிப்பாக இருந்தது.

1. கதையில் புதிரும் இருக்க வேண்டும், அதற்க்கு உரிய தீர்வும் இருக்க வேண்டும்.

2. கதையின் ஒவ்வொரு கட்டமும், தீர்வை நோக்கித்தான் செல்ல வேண்டும்.

3. படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திற்க்குள், கதையின் புதிரை தொடங்க வேண்டும்.

ஒரு திரைப்படத்தின் மொத்த நேரமே இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம்தான், அதில் திரையின் மையக்கதை ஆரம்பமாவதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடும், பிறகு எங்கிருந்து திரைக்கதையைய் நிரப்புவது. சன் தொலைக்காட்சி நிறுவனம் தாயரிக்கும் பெரும்பாலான படங்கள் இதற்கு ஓர் உதாரணம்.

4. ஒவ்வோரு நாற்பது நிமிடங்களிலும் கதையை தீர்வின் விளிம்பிற்க்கே கொண்டு செல்ல வேண்டும்.

சி.பி.ஐன் டைரி குறிப்பு, வஞ்ஜிக்கோட்டை வாலிபன், எம். மற்றும் போர்ன் திரைப்படங்களில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது.

5. கதா நாயகனின் குடும்பப்பின்னணி அல்லது விருப்பம், கதையின் ஓட்டத்துடன் மிகவும் தெளிவாக இணைய வேண்டும்.

சிம்பு நடித்த சில படங்களில், கதா நாயகன் எங்கிருந்து வருகிறார், அவருடைய பின்னணி என்ன? அவருடைய அப்பா யார்? வாழ்வதற்க்கு என்ன செய்கிறார்? என்பது ஒரு புரியாத புதிர், ஆனால் அவருடைய திரைக்கதை வித்தியாசமாக இருந்ததால், அவருடைய திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

6. திரைக்கதைகளில் நகைச்சுவை அவசியமில்லை, ஆனால் கண்டிப்பாக திரைப்படத்தில் நகைச்சுவைக்கு குறைவிருக்கக்கூடாது.

7. பாடல்கள் இன்றியமையாதது

கரகாட்டக்காரன் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட பிராமண்டமான அளவில் வெற்றி பெற்ற படம். இந்த படத்தில் நகைச்சுவையும், பாடல்களுமே கதா நாயகன் அந்தஸ்த்தை பெற்றது.

8. முன்னால் நடந்ததை உரைக்கும் போது, உரைக்கும் நபர் எக்காரணத்தைக் கொண்டும், தான் இல்லாத பகுதிகளை கதையில் சொல்லவே கூடாது.

ஜாவர் சீதாராமன் எழுதி, 1954ல் வெளிவந்த "அந்த நாள்" ஒரு சிறந்த படம்.

9. நடை முறையில் சாத்தியமேயில்லாத, நிஜ வாழ்க்கையில் அனைவரும் விரும்பக்கூடிய ஒரு செயலை திரைப்படத்தில் காட்டினால், வெற்றியைய் தவிர்க்கவே இயலாது.

இதற்கு சங்கர் இயக்கிய இந்தியன், முதல்வன், ஜென்டில் மேன் ஆகிய படங்கள் தலை சிறந்த உதாரணமாகும்.

எம்.ஜி.ஆரே கூட பல தருணங்களில் வருத்தப்பட்டதாக புத்தங்களில் படித்ததுண்டு, இன்றைய தினங்களில் (1975), ரசிகர்கள் ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறையும் உச்சகட்ட காட்சியை எதிர்பார்க்கிறார்கள் என்று, இப்படி இருக்கையில் 2010ல் கதை எவ்வளவு வேகமாக செல்ல வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Facebook